500 கிராமப்புற குடும்பங்களை மருத்துவ மாணவர்கள் தத்தடுக்கும் திட்டம்


500 கிராமப்புற குடும்பங்களை   மருத்துவ மாணவர்கள் தத்தடுக்கும் திட்டம்
x

திருவாரூரில் 500 கிராமப்புற குடும்பங்களை மருத்துவ மாணவர்கள் தத்தெடுத்து சேவையாற்றும் திட்டத்தை முதல்வர் ஜோசப்ராஜ் தொடங்கி வைத்தார்.

திருவாரூர்


திருவாரூரில் 500 கிராமப்புற குடும்பங்களை மருத்துவ மாணவர்கள் தத்தெடுத்து சேவையாற்றும் திட்டத்தை முதல்வர் ஜோசப்ராஜ் தொடங்கி வைத்தார்.

குடும்ப தத்தெடுப்பு திட்டம்

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய திட்டமான குடும்ப தத்தெடுப்பு திட்டம் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் தலைமை தாங்கினார். அப்போது அவர் கிராமப்புற சேவைக்கு புறப்பட்ட மருத்துவக்கல்லூரி மாணவர்களை வழியனுப்பி பேசியதாவது

தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய திட்டமான குடும்ப தத்தெடுப்பு திட்டத்தின் படி மருத்துவ மாணவர்கள் படிக்கும் காலத்தில் கிராமப்புறங்களில் குடும்பங்களை தத்தெடுத்து சேவை செய்ய உள்ளனா். இத்திட்டத்தின்படி சமூகநல மருத்துவத்துறை தலைவர் டாக்டர் மதன்குமார் தலைமையில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குருதேவ் முன்னிலையில், முதல் ஆண்டு மருத்துவ மாணவர்கள் கிராமப்புறத்திற்கு சென்று ஒரு மாணவருக்கு தலா 5 குடும்பங்கள் வீதம் மொத்தம் 500 குடும்பங்களை தத்தெடுக்கின்றனர்.

நோய் தடுப்பு விழிப்புணர்வு

இத்திட்டத்தின் கீழ் தத்தெடுக்கப்பட்ட குடும்பங்களை மருத்துவ மாணவர்கள் தங்களுடைய இளநிலை மருத்துவ படிப்பு காலம் முடியும் வரை பேராசிரியர்களின் வழிகாட்டுதல்படி கண்காணித்து வருவர். இதன் மூலம் அக்குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சுகாதார கல்வி அளித்தல், நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நோய்களை தொடக்கத்தில் கண்டறிதல், உரிய சிகிச்சைக்கு பரிந்துரைத்தல் மற்றும் அரசு சுகாதார நல திட்டங்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற சேவைகளை செய்ய உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் துணை முதல்வர் ராஜேந்திரன், நிலைய மருத்துவ அலுவலர் ராமச்சந்திரன், சமூக நல டாக்டர் கவுதம் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story