பொதுமக்கள் புகார் தெரிவிக்க புதிய சேவை


பொதுமக்கள் புகார் தெரிவிக்க புதிய சேவை
x
தினத்தந்தி 30 May 2023 12:15 AM IST (Updated: 30 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க உங்கள் எஸ்.பி.யிடம் பேசுங்கள் என்கிற புதிய சேவையை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம்


நாகை மாவட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க உங்கள் எஸ்.பி.யிடம் பேசுங்கள் என்கிற புதிய சேவையை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் தொடங்கி வைத்தார்.

சமூக விழிப்புணர்வு

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் நேற்று நிருபர்களை சந்தித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் சிறப்பு குழு அமைத்து, கண்காணிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பள்ளி மாணவர்கள் மாணவிகள், நன்னடத்தை தொடர்பாக சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

சாலை பாதுகாப்பு போக்குவரத்து விதிகளை பின்பற்றுதல் குறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சாராயம் கடத்துதல் மற்றும் விற்பனையை முற்றிலும் ஒழிக்க அதிக சோதனை சாவடிகள் மற்றும் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். நான் பதவியேற்ற 2 நாட்களில் சாராய விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 39 குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். இது ஆரம்பம் தான்.

எஸ்.பி.யிடம் பேசுங்கள்

கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் முற்றிலும் ஒழிக்கப்பட்டும். மீறி யாரேனும் இந்த குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். பொதுமக்கள் போலீசாரை எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் உங்கள் எஸ்.பி.யிடம் பேசுங்கள் என்ற புதிய சேவை இன்று (நேற்று) முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கஞ்சா, சாராயம், லாட்டரி, ரவுடிசம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்த தகவலை 24 மணி நேரமும் 8428103090 என்ற எனது செல்போன் எண்ணில் தெரிவிக்கலாம். ரகசியம் காக்கப்படும் என்றார்.

பேட்டியின் போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story