முப்பெரும் சேவை அமைப்பு தொடக்கம்
முப்பெரும் சேவை அமைப்பு தொடங்கப்பட்டது.
வேதாரண்யம் அடுத்த செம்போடை ஆர்.வி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் எக்ஸ்னோரா சேவை அமைப்பு, இளைஞர் செஞ்சிலுவை சங்கம், நாட்டு நல பணி திட்டம் ஆகிய முப்பெரும் சேவை அமைப்பு தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு செம்போடை ஆர்.வி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வரதராஜன் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். கல்வி நிறுவனங்களின் செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் இளைஞர் செஞ்சிலுவை சங்க நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஆரோக்கியராஜ் ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இதில் கல்லூரி முதல்வர் கல்யாணசுந்தரம், இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் முகமது ஹாசன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் விஜயகுமார், மாணவர் எக்ஸ்னோரா அமைப்பின் திட்ட அலுவலர்கள் முருகதாஸ், ஜெனிதா மற்றும் பலர் கல்நது கெர்ணடனர். முடிவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி செயலாளர் செந்தில் பரிசுகளை வழங்கினார்.