புதிய ஷோரூம் திறப்பு விழா


புதிய ஷோரூம் திறப்பு விழா
x

நெல்லையில் கோத்ரேஜ் இ்ன்டெரியோ புதிய ஷோரூம் திறப்பு விழா நடந்தது

திருநெல்வேலி

நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலை இருதயநகரில் கோத்ரேஜ் இன்டெரிேயா ஷோரூம் திறப்பு விழா நேற்று நடந்தது. தரைத்தளத்தை ரோட்டரி கவர்னரும், இதயம் குரூப் தலைவருமான வி.ஆர்.முத்து திறந்து வைத்தார். முன்னாள் ரோட்டரி கவர்னர் ஆறுமுகப்பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றினார். முதல் தளத்தை நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் திறந்து வைத்தார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கவுன்சிலர் சுப்பிரமணியன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள். 2-வது தளத்தை நெல்லை வியாபாரிகள் சங்க தலைவர் எம்.ஆர்.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

விழாவில் கோத்ரேஜ் இன்டெரிேயா மண்டல அதிகாரிகள் சதீஷ் சம்பந்தம், சித்தேஷ் மிஸ்ரா, முதுநிலை மேலாளர் அபிஷேக், ஏரியா மேலாளர் கிறிஸ்டோபர் நவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை வாசு, சூர்யா ஆகியோர் செய்து இருந்தனர்.

புதிய ஷோரூமில் வீட்டுக்கு தேவையான பர்னிச்சர்ஸ் வகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், லாக்கர், டோர் லாக்கர்கள், சமையல் அறைக்கு தேவையான பொருட்கள், கண்காணிப்பு கேமரா, அலுவலகங்களுக்கு தேவையான பர்னிச்சர்ஸ், டேபிள், சேர், கட்டில், மெத்தை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.


Next Story