விளைநிலத்தில் சாய்ந்த மின் கம்பத்தை அகற்றக்கோரி நூதன போராட்டம்


விளைநிலத்தில் சாய்ந்த மின் கம்பத்தை அகற்றக்கோரி நூதன போராட்டம்
x
தினத்தந்தி 19 July 2023 12:15 AM IST (Updated: 19 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விளைநிலத்தில் சாய்ந்த மின் கம்பத்தை அகற்றக்கோரி நூதன போராட்டம் நடைபெற்றது.

கடலூர்

பெண்ணாடம்,

பெண்ணாடத்தை அடுத்த செம்பேரி கிராமத்தின் வழியாக அரியலூர் மாவட்டத்துக்கு உயரழுத்த மின்கம்பிகள் செல்கின்றன. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பெய்த கன மழையின் போது ஒரு மின்கம்பம் அப்பகுதியில் உள்ள விளைநிலத்தில் சாய்ந்து விழுந்தது. இது குறித்து மின் வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தும் அதை அகற்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி அடைந்து வந்தனர். இதையடுத்து நேற்று அப்பகுதி விவசாயிகள் வயலில் சாய்ந்த மின் கம்பத்தை அகற்றக்கோரி அதற்கு பூ மாலை அணிவித்து இறுதி சடங்கு நடத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story