மதுபார்களை மூடக்கோரி புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மதுபார்களை மூடக்கோரி புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் கோவி.உத்ராபதி தலைமை தாங்கினார். பொறுப்பாளர் அய்யா.சுதாகர் முன்னிலை வகித்தார். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், சட்டவிரோதமாக செயல்படும் மதுபார்களை மூட வேண்டும், தமிழ்நாட்டில் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story