புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
திருமருகல் அருகே உள்ள திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட மரைக்கான்சாவடியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். அப்போது தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், திட்டச்சேரி பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திகா, பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) பொன்னுசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதனை தொடர்ந்து திருக்கண்ணபுரத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழலகம், காரையூர் ஊராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழலகம், உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி ஆகியவற்றை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திருமருகல் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இளஞ்செழியன், அபிநயா அருண்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜனனி பாலாஜி, கலாராணி உத்திராபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.