12 புதிய இருசக்கர ரோந்து வாகனங்கள்
12 புதிய இருசக்கர ரோந்து வாகனங்கள்
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட காவல்துறையில் போலீஸ் நிலையங்களுக்கு ரோந்துப்பணிக்கு வசதியாக புதிதாக இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் சைரன் விளக்குகள், ஒலிபெருக்கி, மைக் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் வகையில் 24 மணி நேர ரோந்துப்பணிக்காக இந்த இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் மொத்தம் 12 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. பல்லடம், அவினாசி, உடுமலை, காங்கயம், வெள்ளகோவில், தாராபுரம், தளி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களுக்கு இந்த ரோந்து வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ரோந்துப்பணிக்கான வாகனங்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. 12 இருசக்கர வாகனங்களை போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் வழங்கினார். கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு (தலைமையிடம்) ஜான்சன் உடனிருந்தார்.