ரூ.13 லட்சத்தில் புதிய கலையரங்கம்


ரூ.13 லட்சத்தில் புதிய கலையரங்கம்
x

உளியநல்லூரில் ரூ.13 லட்சத்தில் புதிய கலையரங்கம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே உள்ள உளியநல்லூர் ஊராட்சியில் கலையரங்கம் கட்டித்தர அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்துவந்தனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும்பொருட்டு நெமிலி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று கலையரங்கம் கட்டுவதற்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு உளியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா சதாசிவம் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் தீனதயாளன், ஒன்றிய குழு உறுப்பினர் கவுரி வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு கலந்துகொண்டு கலையரங்கம் கட்டும்பணிக்கு அடிக்கல் நாட்டினார். இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பொன்னுரங்கம், வினோத், மணி, தணிகைவேலு, புருஷோத்தமன், நடராஜ் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story