ஓய்வுபெற்ற ஆய்வக உதவியாளரிடம் ரூ.74 ஆயிரம் நூதன திருட்டு


ஓய்வுபெற்ற ஆய்வக உதவியாளரிடம் ரூ.74 ஆயிரம் நூதன திருட்டு
x

துறையூரில் ஓய்வுபெற்ற ஆய்வக உதவியாளரிடம் ரூ.74 ஆயிரத்தை நூதன முறையில் திருடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி

துறையூர், ஜூன்.1-

துறையூரில் ஓய்வுபெற்ற ஆய்வக உதவியாளரிடம் ரூ.74 ஆயிரத்தை நூதன முறையில் திருடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆய்வக உதவியாளர்

துறையூரை அடுத்த கலிங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 70). ஓய்வு பெற்ற ஆய்வக உதவியாளரான இவர் துறையூரில் உள்ள ஒரு வங்கியில் பணம் எடுப்பதற்காக வந்தார். அப்போது பணம் எடுக்க உதவி செய்யுமாறு அருகில் நின்றிருந்த வாலிபர் ஒருவரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து, அதன் ரகசிய எண்ணை கூறியுள்ளார். அந்த வாலிபர் கிருஷ்ணன் கேட்ட தொகை ரூ.20 ஆயிரத்தை எடுத்து கொடுத்தார். பின்னர் ஏ.டி.எம்.கார்டையும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

வாலிபருக்கு வலைவீச்சு

இந்த நிலையில் கிருஷ்ணனின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. அதில் பல கட்டங்களாக அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.74 ஆயிரம் எடுத்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. மர்ம வாலிபர் ஏ.டி.எம்.கார்டில் இருந்து நூதன முறையில் பணத்தை எடுத்து திருடி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து கிருஷ்ணன் துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பணத்தை திருடிய வாலிபரை தேடி வருகின்றனர்.


Next Story