புதிய வாகன சட்ட விழிப்புணர்வு பிரசாரம்
விக்கிரவாண்டியில் புதிய வாகன சட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
விழுப்புரம்
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் விக்கிரவாண்டி சுங்கவரி சாவடியில் வாகன ஓட்டிகளுக்கு புதிய வாகன சட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதற்கு விக்கிரவாண்டி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரராஜா தலைமை தாங்கி போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு புதிய வாகன சட்டத்தின் மூலம் விதிக்கப்படும் அபராதம் குறித்து விளக்கி பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் இனிப்பு வழங்கி பாராட்டினர். மேலும் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
Related Tags :
Next Story