புதிய மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி கட்டித்தர வேண்டும்
கூத்தாநல்லூர் அருகே குலமாணிக்கம் ஊராட்சியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி கட்டித்தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் அருகே குலமாணிக்கம் ஊராட்சியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி கட்டித்தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி
கூத்தாநல்லூர் அருகே உள்ள, குலமாணிக்கம் ஊராட்சியில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் தேக்கி வைக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி சேதமடைந்த நிலையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு உள்ளது.
இடிந்து விழும் அபாயம்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தடுப்பு தூண்கள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன. இதனால், ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்து விபரீதம் ஏற்படுமோ என்று அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே, சேதமடைந்த மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றி விட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.