அரிவாளால் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டம்; 11 பேர் கைது


அரிவாளால் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டம்; 11 பேர் கைது
x

அரிவாளால் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடிய; 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

திருச்சி பாலக்கரை காஜாபேட்டை பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் ஆங்கில புத்தாண்டு அன்று நள்ளிரவு 12 மணி அளவில் அங்குள்ள பொது கழிப்பிடம் அருகே அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடினர். மேலும் அந்த பகுதியில் சென்ற பொது மக்களை அரிவாளை காட்டி மிரட்டி கூச்சல் போட்டு உள்ளனர். இது தொடர்பான வீடியோ பதிவு வாட்ஸ்-அப்பில் பரவியது. இந்த சம்பவம் குறித்து செங்குளம் காலனி கிராம நிர்வாக அலுவலர் பாலக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் திருச்சி பாலக்கரை காஜாபேட்டை கீழ கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த ஜான் சகாயராஜ் (வயது 19), செங்குளம் காலனியை சேர்ந்த அசோக் குமார் (20), மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்த அசோக் (23), மணி பாரதி (18), புகழேந்தி (23), திலீபன் ராஜ் (22), சந்தோஷ் (19), சேதுபதி (23), ஸ்டீபன் (25) சாருக் கான் (19), மற்றும் 16 வயது சிறுவன்,உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story