ஆங்கில புத்தாண்டு தினத்தில் பிறந்த புதுமலர்கள்


ஆங்கில புத்தாண்டு தினத்தில் பிறந்த புதுமலர்கள்
x

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் 8 குழந்தைகள் பிறந்தன.

வேலூர்

அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் தினந்தோறும் 3-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடக்கிறது. இதில், ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை 12.01 முதல் மாலை 6 மணி வரை 5 ஆண், 3 பெண் என மொத்தம் 8 குழந்தைகள் பிறந்தன. குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு மருத்துவக் கல்லூரி டீன் திருமால்பாபு, மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதிதிலகம், குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் மற்றும் டாக்டர்கள், நர்சுகள் வாழ்த்துகளை தெரிவித்தனர். நேற்று பிறந்த இந்த அனைத்து குழந்தைகளும் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு தினத்தில் பிறந்தநாள் கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story