கிருஷ்ணகிரி அருகே அந்தோணியார் ஆலய தேர்பவனி ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு


கிருஷ்ணகிரி அருகே  அந்தோணியார் ஆலய தேர்பவனி  ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
x

கிருஷ்ணகிரி அருகே அந்தோணியார் ஆலய தேர்பவனி நடந்தது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே உள்ள புதுவை நகரில் உள்ள கோடி அற்புதர் புனித அந்தோனியார் ஆலய தேர்பவனி கடந்த 5-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் பங்கு தந்தைகள் நவநாள் ஜெபங்களுடன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் இரவு தேர் பவனி நடந்தது. முன்னதாக ஆலயத்தில் தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில், சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர், புனிதர் அந்தோணியாரின் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி நடைபெற்றது. இந்த தேர்பவனியை பாதிரியார் லூர்துசாமி புனித நீர் தெளித்து, மந்திரித்து தொடங்கி வைத்தார். சுண்டம்பட்டி, கந்திகுப்பம், புதுவை நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக வந்த இந்த தேரின் மீது ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று உப்பு, மிளகு ஆகியவற்றை தூவினர்.


Next Story