தீர்ப்பை முழுதாக படித்து பார்த்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் எங்களுக்கு பாதிப்பு கிடையாது. தீர்ப்பை முழுதாக படித்து பார்த்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தஞ்சையில், வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் எங்களுக்கு பாதிப்பு கிடையாது. தீர்ப்பை முழுதாக படித்து பார்த்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தஞ்சையில், வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. கூறினார்.
வைத்திலிங்கம் பேட்டி
தஞ்சையில், ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சொன்னதை போலவே பொதுக்குழு கூட்டியது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. ஆனால் சிவில் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை, எங்கள் கருத்து கட்டுப்படுத்தாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. பொதுக்குழுவில் நிறைவேறப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்றும் கூறவில்லை.
எங்களுக்கு பாதிப்பு கிடையாது
எனவே பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து நாங்கள் மேல்முறையீீடு செய்வோம். இதனால் எங்களுக்கு பெரிய பாதிப்பு கிடையாது. தீர்ப்பை முழுதாக படித்து பார்த்த பிறகு எங்களது அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும்.
சிவில் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை, எங்களது கருத்து கட்டுப்படுத்தாது என சொல்லி இருப்பதால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகவே வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்