நீலகிாி மாவட்ட விவசாயிகளுக்கு நஞ்சநாடு பண்ணையில் இருந்து உருளைக்கிழங்கு விதை உற்பத்தி செய்து வழங்கப்படும்-கலெக்டர் அம்ரித் தகவல்


நீலகிாி மாவட்ட விவசாயிகளுக்கு நஞ்சநாடு பண்ணையில் இருந்து உருளைக்கிழங்கு விதை உற்பத்தி செய்து வழங்கப்படும்-கலெக்டர் அம்ரித் தகவல்
x
தினத்தந்தி 25 Sept 2022 12:30 AM IST (Updated: 25 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

நீலகிாி மாவட்ட விவசாயிகளுக்கு நஞ்சநாடு பண்ணையில் இருந்து உருளைக்கிழங்கு விதை உற்பத்தி செய்து வழங்கப்படும் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி

நீலகிாி மாவட்ட விவசாயிகளுக்கு நஞ்சநாடு பண்ணையில் இருந்து உருளைக்கிழங்கு விதை உற்பத்தி செய்து வழங்கப்படும் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஊட்டி பிங்கர் போஸ்ட் கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர்அம்ரித் தலைமை தாங்கினார். மேலும், விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு உரிய துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டது. மேலும் 102 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இதையடுத்து கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தோட்டக்கலைத்துறையின் மூலம் நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களின் கையேடு மற்றும் பிரதமரின பயிர் காப்பீட்டு திட்டம் குறித்த துண்டுப் பிரசுரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

விதைகள் உற்பத்தி

நீலகிரியில் மூலிகைச் செடி பயிர் செய்யும் விவசாயிகளுக்கு திட்டம் வேண்டுமென்ற கோரிக்கைக்கு அரசுக்கு கருத்துரு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் விவசாயிகளின் விதைக்கிழங்கு வேண்டும் என்ற கோரிக்கைக்கு இணங்க அரசு தோட்டக்கலைப் பண்ணைகளான நஞ்சநாடு மற்றும் கோல்கிரைனில் உருளைக்கிழங்கு விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உழவர் கடன் அட்டை, கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்து முகாம்கள் நடத்தப்படும்.

உழவர் கடன் அட்டை

கூடலூர் உழவர் சந்தையில் வாகனங்கள் நிறுத்தத்திற்கு போதுமான இடவசதி உள்ளது.அதனை பிரபலபடுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தோட்டக்கலைத்துறை, கால்நடைபராமரிப்புத்துறை, மற்றும் மீன்வளத்துறை மூலம் வழங்கப்படும் உழவர் கடன் அட்டை தொடர்பான கோரிக்கைகளுக்கு தனியாக கூட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் வாஞ்சிநாதன், இணை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story