நீலகிரி வீரர்கள் 5 தங்கப்பதக்கங்களை வென்றனர்


நீலகிரி வீரர்கள் 5 தங்கப்பதக்கங்களை வென்றனர்
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேசிய அளவில் மூத்தோர் தடகள போட்டியில் நீலகிரி வீரர்கள் 5 தங்கப்பதக்கங்களை வென்றனர்.

நீலகிரி

கோத்தகிரி,

தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டிகள் கொல்கத்தாவில் உள்ள சால்ட் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழக அணி சார்பில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 9 பேர் கலந்துகொண்டனர். அதில் பெங்கால் மட்டத்தை சேர்ந்த பிரபாகரன் 10 ஆயிரம் மீட்டர், 5 ஆயிரம் மீட்டர் ஓட்ட போட்டியில் 2 தங்கப்பதக்கங்களும், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கமும் வென்றார். குன்னூர் டேன்டீயை சேர்ந்த உதயகுமார் 10 ஆயிரம் மீட்டர், 5,000 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்ட போட்டிகளில் முதலிடம் பிடித்து 3 தங்கப்பதக்கங்களை பெற்றார்.

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை ஊழியர் ரமேஷ் 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2-வது இடம், அளக்கரையை சேர்ந்த ஹேமலதா 5 ஆயிரம் மீட்டர் நடைப்போட்டியில் 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றனர். தமிழகம் அணி சார்பில் பங்கேற்று 5 தங்கப்பதக்கங்கள், 3 வெள்ளிப்பதக்கங்கள் பெற்று நீலகிரிக்கு பெருமை சேர்த்து உள்ளனர். தொடர்ந்து வீரர், வீராங்கனைகளை நீலகிரி மாவட்ட மூத்தோர் தடகள சங்க தலைவர் காரி, செயலாளர் திவாகரன் மற்றும் நிர்வாகிகள் பாராட்டினர்.


Next Story