நீலகிரி பிரீமியர் லீக் கால்பந்து போட்டி


நீலகிரி பிரீமியர் லீக் கால்பந்து போட்டி
x
தினத்தந்தி 28 May 2023 12:45 AM IST (Updated: 28 May 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி பிரீமியர் லீக் கால்பந்து போட்டி

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கத்தில் மொத்தம் 44 அணிகள் பதிவு செய்துள்ளன. இந்த அணிகள் ஏ, பி மற்றும் சி என 3 டிவிஷன்களாக பிரிக்கப்பட்டு, லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றன. ஒவ்வொரு டிவிஷனிலும் சிறப்பாக விளையாடி அதிக புள்ளிகளை பெறும் 2 அணிகள் அடுத்த டிவிஷனுக்கு தரம் உயர்த்தப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் கால்பந்து ரசிகர்களை கவரும் வகையில் இந்த 3 பிரிவுகளிலும் இருந்தும் தலா 2 அணிகளை தேர்வு செய்து அந்த அணிகளுக்கு இடையே முதல் முறையாக போட்டிகளை நடத்த நீலகிரி கால்பந்து சங்கம் முடிவு செய்தது. அதன்படி கோத்தகிரி காந்தி மைதானத்தில் நேற்று தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை நீலகிரி பிரீமியர் லீக் கால்பந்து போட்டி நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் ஹார்வெஸ்டர்ஸ், லெவன் ஸ்டார், நீலகிரி காலேஜ் தாளூர், நீலகிரி புளூஸ், ஹில்ஸ் கிங் மற்றும் நீலகிரி எப்.சி. ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. தினமும் மதியம் 1.30 மற்றும் மாலை 3.30 மணிக்கு என 2 போட்டிகள் நடைபெறுகிறது.

நேற்று நடந்த முதல் போட்டியில் ஹார்வெஸ்டர்ஸ் அணியும், நீலகிரி எப்.சி. அணியும் விளையாடின. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டன. இதனால் போட்டி டிராவில் முடிந்தது. எனவே தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. தொடந்து நடந்த 2-வது போட்டியில் ஊட்டியை சேர்ந்த லெவன் ஸ்டார் மற்றும் நீலகிரி புளூஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடியதால் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இரு அணிகளும் தலா 2 கோல்கள் போட்டிருந்த நிலையில் நீலகிரி புளூஸ் அணி மேலும் ஒரு கோல் போட்டது. இதனால் நீலகிரி புளூஸ் அணி 3-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) நீலகிரி காலேஜ் தாளூர் அணியும், நீலகிரி எப்.சி. அணியும் விளையாடுகின்றன. 2-து போட்டியில் லெவன் ஸ்டார் மற்றும் ஹில்ஸ் கிங் அணிகள் விளையாடுகின்றன.

----------------------------


Next Story