நீலகிரி யங் ஸ்டார்ஸ் அணி வெற்றி
மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் நீலகிரி யங் ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்றது.
நீலகிரி
கோத்தகிரி
நீலகிரி மாவட்ட கால்பந்து கழகம் சார்பில், மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி சிவிஷன் லீக் சுற்று கால்பந்து போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் கோத்தகிரி நீலகிரி எப்.சி. அணியும், குன்னூர் ஜெகதளா அணியும் விளையாடின. இதில் நீலகிரி எப்.சி. அணி 4-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் நீலகிரி யங் ஸ்டார்ஸ் அணியும், எப்.சி. பேந்தர்ஸ் அணியும் விளையாடியது. இதில் நீலகிரி யங் ஸ்டார்ஸ் அணி 2 கோல்கள் போட்டு வெற்றி பெற்றது. எப்.சி. பேந்தர்ஸ் அணி கோல் எதுவும் போடவில்லை. சி டிவிஷன் லீக் சுற்று போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்ற நீலகிரி யங் ஸ்டார்ஸ் அணி பி டிவிஷன் பிரிவுக்கு முன்னேறியது.
Related Tags :
Next Story