ஜனாதிபதி திரவுபதி முர்முவின் நீலகிரி பயணம் ரத்து..!
ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்ற பிறகு முதல் முறையாக தமிழகம் வந்துள்ளார்.
கோவை,
ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்ற பிறகு முதல் முறையாக இன்று தமிழகம் வந்தார். புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மதுரைக்கு வந்த அவர், மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் மாலையில் கோவைக்கு வந்தார். மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்திற்கு ஜனாதிபதி திரபுவதி முர்மு வந்தார். அவரை சத்குரு வரவேற்று, ஈஷா யோகா மையத்தை காரில் சுற்றி காட்டினார். ஜனாதிபதி முர்மு, தீர்த்த குளத்தை பார்வையிட்ட பின், தியான பீடத்தில் வழிபாடு செய்தார். பின்னர் ஆதியோகி முன்பு கோலாகலமாக மஹா சிவராத்திரி விழா தொடங்கியது. விழாவில் ஜனாதிபதி திரவுபதி மும்மு பங்கேற்றார். விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்த நிலையில், இன்று (19-ந் தேதி) நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு சென்று போர் நினைவுச்சின்னத்தில் ஜனாதிபதி திரவுபதி மும்மு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி மும்முவின் நீலகிரி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் நிலவுவதால் ஹெலிகாப்டரில் செல்ல முடியாத சூழல் இருப்பதால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நண்பகல் 12 மணியளவில் கோவை விமானநிலையத்தில் இருந்து ஜனாதிபதி திரவுபதி மும்மு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.