என்.எல்.சி. சுரங்க விாிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்துவது குறித்த 2-ம் கட்ட கருத்துகேட்பு கூட்டம் அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சி.வெ.கணேசன் பங்கேற்பு


என்.எல்.சி. சுரங்க விாிவாக்க பணிக்கு  நிலம் கையகப்படுத்துவது குறித்த 2-ம் கட்ட கருத்துகேட்பு கூட்டம்  அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சி.வெ.கணேசன் பங்கேற்பு
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்துவது குறித்த 2-ம் கட்ட கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சி.வெ.கணேசன் பங்கேற்றனா்.

கடலூர்

நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. தற்போது என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிகளுக்காக அருகில் உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுதொடா்பாக கடந்த 18-ந் தேதி நடந்த முதற்கட்ட கருத்துகேட்பு கூட்டத்தில், கடந்த காலங்களில் என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்தியபோது வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். பட்டா உடன் கூடிய மாற்று மனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் முன்வைத்தனர்.

கருத்து கேட்பு

அதன் அடிப்படையில் என்.எல்.சி. நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி சில சுமூக முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே நெய்வேலி வட்டம் 2-ல் உள்ள விருந்தினர் இல்லத்தில் 2-ம் கட்ட கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், என்.எல்.சி. நிறுவன தலைவர் ராகேஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் சபா.ராஜேந்திரன், தி. வேல்முருகன், அருண்மொழிதேவன், பாண்டியன், எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில், கடந்த கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து தெளிவாக குறிப்பிடப்படாததால் 2-ம் கட்ட கருத்துகேட்பு கூட்டமும் சுமூக தீர்வு எட்டப்படாமல் முடிந்ததாக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

பா.ம.க. அனுமதிக்காது

அப்போது கடலூர் மாவட்ட பா.ம.க. வடக்கு மாவட்ட செயலாளரும், பொறியாளருமான ரவிச்சந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் முத்துக்கிருஷ்ணன், செல்வ மகேஷ் மற்றும் மாநில நிர்வாகி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், நிலம் கையகப்படுத்தப்பட உள்ள பகுதிகளில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும் மாற்றுமனையும் வழங்க வேண்டும். இல்லையென்றால் ஒரு பிடி மண்ணைக் கூட என்.எல்.சி. நிர்வாகம் கையகப்படுத்த பா.ம.க. அனுமதிக்காது என கூறப்பட்டிருந்தது.

செயல் வடிவம்

இதையடுத்து சுரங்கம்-1 பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கான கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:- என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்த காலையில் இருந்தே கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

கடந்த 18-ந்தேதி நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தின் போது விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள், நில உரிமையாளர்கள் கொடுத்த கோரிக்கையின் அடிப்படையில் 14 கோரிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் பேசி செயல் வடிவம் கொடுத்துள்ளாா்.

நிரந்தர வேலைக்கு தோ்வு

அதன் அடிப்படையில் ஒரு ஏக்கருக்கு ரூ.25 லட்சமாக வழங்குவது, நிரந்தர வேலை கிடைக்காதவர்களுக்கு தலா மாதம் ரூ.10 ஆயிரம் என 20 ஆண்டுகள் ஊதியம் வழங்கப்படும். அவ்வாறு தேவைப்படாதவர்களுக்கு ஒரே தவணையாக ரூ.17 லட்சம் வழங்கப்பட உள்ளது.

மேலும் என்.எல்.சி. நிறுவனத்தில் 194 நபர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்புக்கான தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. அதில் என்.எல்.சி. நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு கூடுதலாக 20 மதிப்பெண் அடிப்படையில் வேலை வாய்ப்பு பெற கூடுதல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story