என்.எல்.சி. சுரங்கத்தில் கண்காணிப்புத்துறை அதிகாரி ஆய்வு


என்.எல்.சி. சுரங்கத்தில் கண்காணிப்புத்துறை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 24 July 2023 12:15 AM IST (Updated: 24 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலி என்.எல்.சி. சுரங்கத்தில் கண்காணிப்புத்துறை அதிகாரி ஆய்வு

கடலூர்

நெய்வேலி

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் கண்காணிப்புத்துறை தலைமை அதிகாரியாக கூடுதல் பொறுப்பேற்றுள்ள பிரஜேஷ்குமார் திரிபாதி நெய்வேலி 1-வது சுரங்கத்துக்கு சென்று, ஆய்வு செய்தார். முன்னதாக அவரை சுரங்க செயல் இயக்குனர் ராஜசேகர் ரெட்டி மற்றும் நிலத்துறை செயல் இயக்குனர் ஜாஸ்பர்ரோஸ் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து அங்குள்ள அதிகாரிகளை சந்தித்த அவர் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் ஒரு பகுதியாக தாம் இருப்பதில் பெருமை கொள்வதாகவும், சுரங்க நடவடிக்கைகளுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிக்கும் நிறுவனத்தின் முயற்சிகளை பாராட்டுவதாகவும் தெரிவித்தார். மேலும், ஒவ்வொரு தனிநபருக்கும் ஆதரவளித்து உதவுவதில் கண்காணிப்பு துறையின் பங்கை எடுத்துரைத்த அவர், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுடன் அனைவரும் பணிபுரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து புதிய அனல் மின் நிலையத்துக்கு சென்ற அவா் பல்வேறு அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, இந்தியாவை ஆற்றல் மிகுந்த நாடாக மாற்றுவதற்கு பெரும்பங்காற்றி வரும் அனைவரின் பணிகளையும் பாராட்டுவதாக தெரிவித்த அவர் 'பாதுகாப்பே முதன்மையானது' என்ற எண்ணத்துடன் தொடர்ந்து பணியாற்றிட வேண்டும் என்றும், அனைவரது எதிர்கால முயற்சிகளுக்கும், தனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாகவும், தெரிவித்தார்.

தொடர்ந்து என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தில் "முன் தடுப்பு விழிப்புணர்வு" குறித்த கருத்தரங்கில் பேசிய அவர் "லிக்னைட் விழிகள்" என்ற கண்காணிப்புத்துறையின் மின்னிதழ் பதிப்பை, வெளியிட்டார். இந்தநிகழ்ச்சியில் என்.எல்.சி. அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story