தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
மதுரை,
மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகத்திற்கு காவிரி நீர் தரமுடியாது என கர்நாடகா கூறுவது சட்டவிரோதம். சட்டப்படியோ, பேச்சுவார்த்தை மூலமோ காவிரி நீரை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப் போராட்டம் அல்லது பேச்சுவார்த்தை மூலமாக திமுக அரசு துரிதமாக செயல்பட்டு, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெற்று தந்த உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை. சசிகலாவை இதுவரை சந்திக்கவில்லை. விரைவில் சசிகலாவை சந்திக்க வாய்ப்பு உள்ளது. புரட்சி பயணம் மீண்டும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story