எந்த சம்பந்தமும் இல்லை -ஆனால் 30 ஆண்டுகள் சிறை"-வீரப்பன் கொலை வழக்கில் விடுதலையானவர் பேட்டி
சந்தன கடத்தல் வீரப்பனுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வீரப்பன் வழக்கில் தண்டனை பெற்று விடுதலையாகியுள்ள ஆண்டியப்பன் மற்றும் பெருமாள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு,
சந்தன கடத்தல் வீரப்பனுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வீரப்பன் வழக்கில் தண்டனை பெற்று விடுதலையாகியுள்ள ஆண்டியப்பன் மற்றும் பெருமாள் தெரிவித்துள்ளனர்.
வீரப்பன் கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஆண்டியப்பன் மற்றும் பெருமாள் ஆகியோரை முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசு விடுதலை செய்தது.
ஈரோடு, இந்திய கம்யஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், விடுதலை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். தண்டனை காலம் முடிந்து தங்களை போல் சிறைகளில் தவித்து வருபவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story