மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்
மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என கலெக்டர் லலிதா அறிவித்துள்ளார்
மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என கலெக்டர் லலிதா அறிவித்துள்ளார்.
பரவலாக மழை
மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் உருவாகி உள்ள வளிமண்டல காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.இதையடுத்து, மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களிடம் கலெக்டர் கூறியதாவது:-
'ஆரஞ்சு' அலர்ட்
மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை), 12-ந் தேதி (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை அறிக்கை கூறுகிறது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 'ஆரஞ்சு' அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் யாரும் அடுத்த அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.