கண்காணிப்பு கேமராவில் புலி தொடர்பான காட்சிகள் பதிவாகவில்லை


கண்காணிப்பு கேமராவில் புலி தொடர்பான காட்சிகள் பதிவாகவில்லை
x
தினத்தந்தி 7 July 2023 12:15 AM IST (Updated: 7 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிற்றாறு பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் புலி தொடர்பான காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை. மேலும், பொதுமக்கள் 2 நாட்கள் எச்சரிக்ைகயாக இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

சிற்றாறு பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் புலி தொடர்பான காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை. மேலும், பொதுமக்கள் 2 நாட்கள் எச்சரிக்ைகயாக இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

புலி நடமாட்டம்

பேச்சிப்பாறை அருகே உள்ள சிற்றாறு ரப்பர் கழக பகுதியில் புலி நடமாடுவதாக ரப்பர் தொழிலாளர்கள் தெரிவித்தனர். நேற்று முன்தினம் அதிகாலையில் மோகன்தாஸ் என்ற தொழிலாளியின் வீட்டின் அருகில் கொட்டகையில் கட்டியிருந்த ஒரு ஆட்டை புலி அடித்துக்கொன்று சாப்பிட்டதாக அந்த பகுதி மக்கள் கூறினர்.

இதையடுத்து புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் சிற்றாறு ரப்பர் கழக குடியிருப்புப் பகுதியை ஒட்டிள்ள பகுதியில் அதிநவீன 10 கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தினர். இந்த கேமராக்கள் புலி அந்த பகுதியில் வந்தால் அதனை புகைப்படமாக எடுக்கும் திறன் கொண்டவை.

கேமராக்கள் ஆய்வு

மேலும் புலியின் நடமாட்டைத் கண்காணிக்கவும், பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவும் வனத்துறையினர் இங்கு முகாமிட்டுள்ளனர். இவர்கள் 5 பேர் கொண்ட குழுவாக சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று காலையில் இங்கு பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் பதிவான காட்சிகளை களியல் வனச்சரக அலுவலர் முகைதீன் அப்துல் காதர் தலைமையிலான வனத்துறையினர் ஆய்வு செய்தனர். இதில் புலி தொடர்பான எந்த காட்சிகளும் பதிவாகவில்லை.

இதுகுறித்து வனச்சரக அலுவலர் முகைதீன் அப்துல் காதர் கூறியதாவது:-

புலி நடமாட்டம் உள்ளது என்று கூறப்பட்ட குடியிருப்புப் பகுதிகளைெயாட்டி 10 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகிறோம். இதில் புலி தொடர்பாக காட்சிகள் பதிவாகவில்லை. பொதுவாக புலி ஒரு ஆட்டை அடித்துக்கொன்று சாப்பிட்டால் அதன் பிறகு ஓரிரு நாட்களுக்கு உணவுக்காக வெளியே வருவதில்லை. எனவே புலி இருக்கிறது என்றால் இரண்டு நாளில் மீண்டும் வெளியே வரலாம்.

எச்சரிக்கையாக இருக்கவும்

எனவே கண்காணிப்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட திட்டமிட்டப் பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதியில் உள்ள குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது'

இவ்வாறு அவர் கூறினார்


Next Story