குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத40 நிறுவனங்கள் மீது நடவடிக்கை:தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்


குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத40 நிறுவனங்கள் மீது நடவடிக்கை:தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத 40 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தொழிலாளர் உதவி ஆணையா் தெரிவித்தார்.

தேனி

தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

குடியரசு தினமான நேற்று தேனி மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத கடை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் தேனி தொழிலாளர் உதவி ஆணையர் சிவக்குமார் தலைமையில் ஆய்வு நடந்தது. மொத்தம் 62 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 40 நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. அந்த நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குடியரசு தின விடுமுறை போன்ற அரசு பொது விடுமுறை நாட்களில் பணிக்கு அமர்த்திய தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது சம்பளத்துடன் கூடிய விடுமுறையோ அளிக்க வேண்டும். தவறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


Related Tags :
Next Story