பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்காத39 நிறுவனங்கள் மீது வழக்கு


பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்காத39 நிறுவனங்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குடியரசு தின விழாவையொட்டி பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 39 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர்

குடியரசு தின விழாவையொட்டி பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 39 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திடீர் ஆய்வு

திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ப.வசந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த ஆணையின்படியும், திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் க.ஜெயபால், திருச்சி தொழிலாளர் இணை ஆணையா் திவ்யநாதன் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலும், திருவாருர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ப.வசந்தகுமார் தலைமையிலான தொழிலாளர் துறை அலுவலர்கள் அடங்கிய குழு, குடியரசு தின விழாவையொட்டி திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களில் இயங்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவத்து நிறுவனங்கள் என மொத்தம் 79 நிறுவனங்களில் திடீரென ஆய்வு செய்தனர்.

39 நிறுவனங்கள் மீது வழக்கு

இந்த ஆய்வில் 20 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மற்றும் 19 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 39 நிறுவனங்கள் குடியரசு தினத்தன்று முறையாக அறிவிப்பு செய்து பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது மாற்று விடுமுறையோ முறையாக அளிக்க வழிவகை செய்யாமல் பணிக்கு அமர்த்தியது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக அந்த நிறுவனங்கள் மீது வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story