திமுகவை யாராலும் அசைக்க முடியாது - அமைச்சர் துரைமுருகன் பேச்சு
திமுகவை யாராலும் அசைக்க முடியாது என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே பட்டபுதூரில் தி.மு.க. முப்பெரும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சியின் முன்னோடிகளுக்கு பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
விழாவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
முப்பெரும் விழாவில் துரைமுருகன் பேசியதாவது:-
ஆட்சியையும் கட்சியையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறம்பட செயல்படுத்தி வருகிறார். கருத்து வேறுபாடுகளை தாண்டி பிரதமர் மோடியின் நன்மதிப்பை பெற்றவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். திமுகவை யாராலும் அசைக்க முடியாது. 60 ஆண்டு காலத்துக்கு திமுக ஆட்சிக்கும், கட்சிக்கும் பயமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story