அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்ட யாருக்கும் உரிமை இல்லை - மதுரை ஐகோர்ட்டு
தமிழக அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்ட யாருக்கும் உரிமை இல்லை என ஐகோர்ட்டு மதுரை கிளை நிதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதுரை,
கரூர் அரவக்குறிச்சி அருகே மணமேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரேணுகோபால் ,அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள மரங்களை வெட்டுபவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த தெரிந்துகொள்வதாக மதுரை ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது
தமிழக அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்ட யாருக்கும் உரிமை இல்லை என ஐகோர்ட்டு மதுரை கிளை நிதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள மரங்களை வெட்ட வேண்டும் என்றால் சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறியுள்ளனர்.பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரங்களை வெட்டியவர் மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.