விடுதிகளில் அடையாள அட்டை இன்றி யாரையும் அனுமதிக்க கூடாது


விடுதிகளில் அடையாள அட்டை இன்றி யாரையும் அனுமதிக்க கூடாது
x
தினத்தந்தி 26 Nov 2022 12:15 AM IST (Updated: 26 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விடுதிகளில் அடையாள அட்டை இன்றி யாரையும் அனுமதிக்க கூடாது என்று உரிமையாளர்களுக்கு, போலீஸ் ஐ.ஜி. சுதாகர் அறிவுரை வழங்கியுள்ளார்.

நீலகிரி

ஊட்டி

விடுதிகளில் அடையாள அட்டை இன்றி யாரையும் அனுமதிக்க கூடாது என்று உரிமையாளர்களுக்கு, போலீஸ் ஐ.ஜி. சுதாகர் அறிவுரை வழங்கியுள்ளார்.

திறன் மேம்பாட்டு மையம்

நீலகிரி மாவட்ட காவல்‌ துறையில்‌ பணிபுரியும்‌ போலீசார் மற்றும்‌ போலீஸ் அதிகாரிகளின்‌ திறனை மேம்படுத்த பழைய மாவட்ட காவல்‌ அலுவலக கட்டிடம், அப்துல் ‌கலாம்‌ திறன்‌ மேம்பாட்டு மையமாக மாற்றப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது இதனை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் திறந்து வைத்து பார்வையிட்டார். இங்கு சட்டம்‌ சார்ந்த புத்தகங்கள்‌, தடயவியல்‌ மற்றும்‌ இணையவழி குற்றங்கள்‌ சார்ந்த புத்தகங்கள்‌, உயர்‌ பதவிக்கான போட்டித்தேர்வுக்கு தயாராகும் வகையிலான‌ புத்தகங்கள்‌ வைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள், போலீசாருடன் கலந்துரையாடும் வகையில் கலந்தாய்வு கூடம்‌ மற்றும் சமூக வலைத்தள பகுப்பாய்வு கூடம்‌ உள்ளது.

புதிய மென்பொருள்

விழாவில் கலந்துகொண்ட பிறகு போலீஸ் ஐ.ஜி. சுதாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் சைபர் பாரன்சிக்ஸ் மற்றும் அனாலிடிக்ஸ் மையம் (இணையதள குற்றங்கள் தொடர்பான தடயவியல் மற்றும் பகுப்பாய்வு) மையம் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சைபர் கிரைம் போலீஸ் பிரிவு உள்ளது. அதன் போலீஸ் நிலையத்தில் தேவையான சில மென்பொருட்கள் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது சென்டிமென்டல் அனாலிசிஸ் (உணர்வுபூர்வமான விஷயங்கள் குறித்த பகுப்பாய்வு) என்ற புதிய மென்பொருள் மேற்கு மண்டலத்தில் முதன் முறையாக நீலகிரியில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் கருத்துகள் சர்ச்சை அல்லது பதற்றம் ஏற்படுத்தும் வகையில் இருந்தால் எளிதில் கண்டறியலாம்.

'ஒமேகா-3' போலீஸ் படை

இதேபோன்று துளிர் என்ற தற்கொலை தடுப்பு மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இது பணியாற்றுபவர்களுக்கும், கவுன்சிலிங்குக்கு வருபவர்களுக்கும் சிறந்த நேர்மறை எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. மேற்கு மண்டலத்தை பொறுத்தவரை நீலகிரி மாவட்டத்தில் சைபர் புகார் தொடர்பான குற்றங்களில் வங்கி கணக்குகளை முடக்கி ரூ.3 கோடி மீட்கப்பட்டு, உரியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆயுதப்படை பயிற்சி மைதானத்திற்கு புதிய இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அடையாள அட்டை இல்லாமல் விடுதிகளில் யாரையும் தங்க வைக்க கூடாது. மேலும் அவர்கள் தரும் செல்போன் எண் பயன்பாட்டில் உள்ளதா என்று சோதனை செய்ய வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் நவீன ஆயுதங்கள் கொண்ட ஒமேகா-3 என்ற புதுப்படை தொடங்கப்பட்டு மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் டி.ஐ.ஜி. முத்துச்சாமி, நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story