வேலை வாய்ப்பு குறித்து 'வாட்ஸ் அப்பில்' பரவி வரும் தகவலை யாரும் நம்ப வேண்டாம்


வேலை வாய்ப்பு குறித்து வாட்ஸ் அப்பில் பரவி வரும் தகவலை யாரும் நம்ப வேண்டாம்
x

கால்நடை பராமரிப்பு துறையில் வேலை வாய்ப்பு குறித்து ‘வாட்ஸ் அப்பில்’ பரவி வரும் தகவலை யாரும் நம்ப வேண்டாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டத்தில் 'வாட்ஸ் அப்' மூலம் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் உதவியாளர்கள், டிரைவர்கள் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் எடுக்கப்படுகிறது என பரவி வருகிறது. இதில் சம்பளம் ரூ.15 ஆயிரம் மற்றும் ரூ.18 ஆயிரம் எனவும், தகுதி, வயது ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு 90 மணி நேரம் பயிற்சி அளித்து, பணி நியமன ஆணை வழங்கப்படும் எனவும் பரவி வருகிறது. மேலும் இதற்கான ஆணை ஜூன் முதல் அல்லது 2-வது வாரத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு துறையில் வேலை வாய்ப்பு குறித்து 'வாட்ஸ் அப்' மூலம் பரவி வருவது முற்றிலும் தவறான தகவல்கள்.இதற்கும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறைக்கு தொடர்பில்லை, எனவே இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story