வயல்களின் வழியாக உடலை தூக்கி சென்ற கிராமமக்கள்


வயல்களின் வழியாக உடலை தூக்கி சென்ற கிராமமக்கள்
x

சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லாததால் வயல்களின் வழியாக இறந்தவரின் உடலை கிராமமக்கள் தூக்கி சென்றனர். மேலும் அப்பகுதி மக்கள் மயானத்துக்கு மாற்று இடம் ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லாததால் வயல்களின் வழியாக இறந்தவரின் உடலை கிராமமக்கள் தூக்கி சென்றனர். மேலும் அப்பகுதி மக்கள் மயானத்துக்கு மாற்று இடம் ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூதாட்டி சாவு

தஞ்சையை அடுத்த தோட்டக்காடு ஊராட்சியில் நெடார் ஆலக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லை. யாராவது இறந்தால் கூட வயல்களின் வழியாக தான் உடலை தூக்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது.இந்தநிலையில் நேற்றுகாலை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமதாஸ் மனைவி ராஜேஸ்வரி (வயது70) உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். அவரது உடலை தகனம் செய்வதற்காக சுடுகாட்டிற்கு தூக்கி சென்றனர். ஆனால் சாலை வசதி இல்லாத காரணத்தினால் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வயல்களின் வழியாகவே உடலை தூக்கி சென்றனர்.

சிரமப்பட்ட கிராமமக்கள்

வயல்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்கதிர்கள் வழியாகவே தூக்கி சென்றபோது தூக்கி சென்ற கிராமமக்கள் மிகவும் சிரமப்பட்டதுடன், நெற்கதிர்கள் சாய்ந்தும், மிதிப்பட்டு வீணானது. பல்வேறு சிரமத்திற்கு இடையே அந்த மூதாட்டியின் உடல் சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.இது குறித்துஅப்பகுதி மக்கள் கூறும்போது, வயல்களில் சாகுபடி செய்யப்படாதபோது அந்த வழியாக எளிதாக இறந்தவர்களின் உடலை தூக்கி சென்றுவிட முடியும். ஆனால் சாகுபடி செய்யப்பட்டு இருந்தால் சேரும், சகதியில் மிதித்து தான் உடலை சுமந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சுடுகாட்டிற்கு சாலை வசதி செய்ய வேண்டும் என பலமுறை புகார் அளிக்கப்பட்டும் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. இறந்தவர்களின் உடலை நிம்மதியாக தூக்கி சென்று தகனம் செய்யும் வகையில் வெட்டாற்றின் கரையில் சுடுகாடு அமைத்து தர வேண்டும் என்றனர்.


Next Story