நொச்சிக்குளம் புனித மிக்கேல் ஆதிதூதர் ஆலய சப்பரபவனி
நொச்சிக்குளம் புனித மிக்கேல் ஆதிதூதர் ஆலய சப்பரபவனி நடந்தது.
தட்டார்மடம்;
சாத்தான்குளம் அருகே உள்ள நொச்சிக்குளம் புனித மிக்கேல் ஆதிதூதர் ஆலய திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் காலையில் திருப்பலி, மாலை கருங்கடல் பங்குதந்தை பாக்கிய ஜோசப்ராஜ் தலைமை வகித்து திருவிழா கொடியேற்றினார்.
தொடர்ந்து நற்கருணை ஆசீர், மறையுரை நான்குனேரி பங்குதந்தை அந்தோணி ராஜா தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து 2-ஆம் நாள் முதல் 8-ஆம் நாள் வரை திருப்பலி, நற்கருணைஆசீர், மறையுரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 9-ஆம் நாளான நேற்று முன்தினம் அருள்தந்தைகள் ஞானராஜ், ஜெரால்டு, ரீகன், ஜெகன் ஆகியோர் தலைமையில் காலை திருப்பலி, மாலை சாத்தான்குளம் வட்டார முதன்மைகுரு ஜோசப் ரவிபாலன் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, திவ்ய நற்கருணை பவனி நடைபெற்றது. கூட்டப்பனை தந்தை லூசன் மறையுரை வழங்கினார். தொடர்ந்து புனித மிக்கேல் ஆதிதூதர் சப்பர பவனி நடைபெற்றது. நேற்று நொச்சிக்குளம் முதல் பங்கு பணியாளர் ஏரல் சூசைராஜா தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி, புது நன்மை வழங்குதல், நடைபெற்றது. அருள்தந்தை ஜெரால்டு திருமுழுக்கு வழங்கினார். தொடர்ந்து ஆதிதூதர் சப்பரபவனி நடைபெற்றது. இரவு நற்கருணை ஆசீர் நடைபெற்றது.