வேட்பு மனு தாக்கல் தொடங்கியது


வேட்பு மனு தாக்கல் தொடங்கியது
x

புதுக்கோட்டை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வருகிற 23-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

புதுக்கோட்டை

கவுன்சிலர்கள்

புதுக்கோட்டை மாவட்ட திட்டமிடும் குழுவிற்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சாதாரண தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் இருந்து 10 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் மற்றும் பேரூராட்சிகளின் வார்டு கவுன்சிலர்களில் இருந்து 2 பேரும் என மொத்தம் 12 பேர் புதுக்கோட்டை மாவட்ட திட்டமிடும் குழுவின் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. வேட்பு மனுவை புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் இதற்கென நியமனம் செய்யப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வருகிற 10-ந்தேதி ஆகும்.

வாக்குப்பதிவு

வேட்பு மனுக்கள் பரிசீலனை வருகிற 12-ந்தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற வருகிற 14-ந்தேதி கடைசி நாளாகும். தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் நடவடிக்கைகள் வருகிற 24-ந்தேதியுடன் முடிவடையும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் முதல் கூட்டம் வருகிற 28-ந்தேதி நடைபெறும். மேற்கண்ட தகவலை தேர்தல் நடத்தும் அலுவலரான கவிதப்பிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முதல் நாள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story