அழகுக்கலை அமைப்பு சாரா தொழிலாளர் நலசங்க மாநில நிர்வாகக்குழு கூட்டம்
சங்கராபுரத்தில் அழகுக்கலை அமைப்பு சாரா தொழிலாளர் நலசங்க மாநில நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது.
சங்கராபுரம்,
தமிழ்நாடு மருத்துவர் சமுதாய பேரவை முடிதிருத்தும் அழகுக்கலை அமைப்புசாரா தொழிலாளர் நல சங்கத்தின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் சங்கராபுரத்தில் நடைபெற்றது. இதற்கு மாநில துணைத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இளைஞர் அணி செயலாளர் அருண்குமார், நகர அவைத்தலைவர் கண்ணன், தலைவர் மணிவேல், பொருளாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கணபதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் பழனி, பொதுச்செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் அழகர்சாமி, இளைஞரணி செயலாளர் தங்கமலை, கொள்கை விளக்க செயலாளர் திரவியம் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் சுதந்திரப்போராட்ட தியாகி விஸ்வநாததாஸ் மணிமண்டபத்தை புனரமைக்க ரூ.2 கோடி ஒதுக்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் இசைக்கலைஞர் அணி செயலாளர் சிவசங்கர், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் அன்பரசு, பாண்டுரங்கன், ரமேஷ், தங்கமணி, பாண்டு, மணிகண்டன், தியாகராஜன், அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.