வெளி மாவட்ட நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது
அரசு கொள்முதல் நிலைய ஊழியர்கள் வெளி மாவட்ட நெல்ைல கொள்முதல் செய்யக்கூடாது என குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா அறிவுறுத்தினார்.
அரசு கொள்முதல் நிலைய ஊழியர்கள் வெளி மாவட்ட நெல்ைல கொள்முதல் செய்யக்கூடாது என குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா அறிவுறுத்தினார்.
குறுவை அறுவடை பணி
டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை பணி தொடங்கிய நிலையில் நுகர்பொருள் வாணிபக கழகம் மூலம் அரசு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, நன்னிலம், குடவாசல், வலங்கைமான் உள்ளிட்ட பல்வேறு பகுதிளில் இதுவரை 152 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
கருத்தரங்கம்
வெளி மாவட்ட நெல்களை கொள்முதல் செய்யப்படாமல் இருப்பதற்காக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் மற்றும் நுகர் பொருள் வாணிப கழகம் அதிகாரிகள் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருவாரூரில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றி வரும் பட்டியல் எழுத்தர் மற்றும் கொள்முதல் அலுவலர் ஆகியோருக்கான கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்கில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
புகாருக்கு ஆளாக கூடாது
கொள்முதல் நிலையங்களில் பணியாற்றி வரும் அலுவலர்கள் விவசாயிகளிடம் இருந்து சரியான எடையில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். வெளி மாவட்ட நெல்ைல கொள்முதல் செய்யக்கூடாது. குறிப்பாக விவசாயிகளிடமிருந்து எந்த ஒரு புகாருக்கும் ஆளாகாமல் கொள்முதல் பணியில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தஞ்சை சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், நுகர்பொருள் வாணிப கழக முதல்நிலை மண்டல மேலாளர் ராஜராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.