சென்னை, மதுரை ஐகோர்ட்டுகளில் ஒரே நீதிபதியிடம் 2 வழக்கு தாக்கல் செய்து சிக்கிய வெளிநாடுவாழ் இந்தியர்- ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்தாவிட்டால் நாடு திரும்ப முடியாது என கண்டிப்பு

சென்னை, மதுரை ஐகோர்ட்டுகளில் ஒரே நீதிபதியிடம் 2 வழக்கு தாக்கல் செய்து சிக்கிய வெளிநாடுவாழ் இந்தியர்- ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்தாவிட்டால் நாடு திரும்ப முடியாது என கண்டிப்பு
x

சென்னை, மதுரை ஐகோர்ட்டுகளில் ஒரே நீதிபதியிடம் 2 வழக்கு தாக்கல் செய்து சிக்கிய வெளிநாடுவாழ் இந்தியர்- ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்தாவிட்டால் நாடு திரும்ப முடியாது என கண்டிப்பு

மதுரை

லண்டனை சேர்ந்த இந்திரகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், திருச்சியில் உள்ள எனது தாயாரை சந்திப்பதற்காக இந்தியா வர முடிவு செய்து உள்ளேன். இதற்காக இ-விசா வழங்கும்படி அதிகாரிகளுக்கு அனுப்பிய எனது விண்ணப்பத்தை ஏற்க வேண்டும் என்றும், இதில் குடியுரிமை அதிகாரிகள் எந்த தடையையும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரர் இதே கோரிக்கைக்காக ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அப்போதும் இந்த வழக்கை நான்தான் விசாரித்தேன். தற்போது இங்கும் புதிதாக இந்த வழக்கு என்னிடமே விசாரணைக்கு வந்து உள்ளது. மனுதாரரின் விண்ணப்பம் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே மனுதாரர் சுத்தமான கரத்துடன் இந்த கோர்ட்டை நாடவில்லை.

மனுதாரரின் இதுபோன்ற செயல்களை ஊக்கப்படுத்த முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மனுதாரர் அல்லது அவரது தாயாரோ வருகிற 15-ந்தேதிக்குள் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும். இந்த அபராதத் தொகையை செலுத்தவில்லை என்றால், மனுதாரர் இந்தியாவுக்கு வருவதற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story