முத்திரையிடாத தராசுகள் பயன்படுத்திய 20 இறைச்சி கடைகளுக்கு அபராதம்: தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை
தேனியில் முத்திரையிடாத தராசுகள் பயன்படுத்திய 20 இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதி்க்கப்பட்டது
தேனி
தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவக்குமார் தலைமையில், தேனி மாவட்டத்தில் இறைச்சி கடைகளில் சட்டமுறை எடையளவு சட்ட விதிகள் பின்பற்றப்படுகிறதா? என தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மொத்தம் 25 கடைகளில் ஆய்வு செய்தனர். அதில் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் தராசுகளுக்கு மறுமுத்திரையிடாமலும், மறுபரிசீலனை சான்று வைக்கப்படாமலும் இருந்ததாக 20 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. அந்த கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெறும் என்றும், விதிகளை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொழிலாளர் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story