தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த வடமாநில தொழிலாளி சாவு


தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த வடமாநில தொழிலாளி சாவு
x

தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த வடமாநில தொழிலாளி இறந்தார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே சொரக்காயல்நத்தம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிக்காக சுமார் 50 பேர் பீகார் மாநிலத்தில் இருந்து வந்து உள்ளனர். இவர்கள் நேற்று பணி முடிந்து அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு சென்று ஓய்வு எடுத்துள்ளனர். அப்போது தண்ணீர் பாட்டிலில் வைத்திருந்த ஆசிட்டை துக்கன் (வயது 60) என்பவர் தண்ணீர் என நினைத்து குடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதில் மயங்கி விழுந்த அவரை உடனடியாக சக ஊழியர்கள் நாட்றம்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்படி சேலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த துக்கன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திம்மம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story