மின்சாரம் தாக்கி வட மாநில வாலிபர் பலி


மின்சாரம் தாக்கி  வட மாநில வாலிபர் பலி
x

செங்கம் அருகே மின்சாரம் தாக்கி வட மாநில வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

செங்கம்

அரசு அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கு இணையதள சேவை வழங்க அரசின் மூலம் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சேவைகள் வழங்க தேவையான ஒயர்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு இணைப்பு வழங்கும் பணியில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரோஜுரி பகுதியை சேர்ந்த ஷகீல்அகமது (வயது 32) என்பவர் இன்று ஈடுபட்டிருந்தார்.

செங்கம் அருகே மேல்வணக்கம்பாடி பகுதியில் அவர் பணியில் இருந்தபோது சூறைக்காற்று வீசியது. அப்போது மின் கம்பத்தின் மீது ஏணி உதவியுடன் இருந்த ஷகீல்அகமது எதிர்பாராத விதமாக மின்ஒயர் உரசி மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.

உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து ஷகீல்அகமதுவின் உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து மேல்செங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story