வடமாநில வாலிபர் மயங்கி விழுந்து சாவு
அம்பையில் வடமாநில வாலிபர் மயங்கி விழுந்து இறந்தார்.
திருநெல்வேலி
அம்பை:
உத்தரபிரதேசம் மாநிலம் சாஜ்பூர் பகுதியை சேர்ந்த அமிதாப்பச்சன் மகன் ரவிகாந்த் (வயது 20). இவர் மற்றும் இவரது சகோதரர் இருவர் அம்பை அருகே உள்ள சோலைபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அம்பை பூக்கடை பஜாரில் பானிபூரி வியாபாரம் பார்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை ரவிகாந்த் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை சகோதரர் மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திாியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து அம்பை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கூடுதல் சூப்பிரண்டு பல்வீர்சிங் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து மருத்துவமனையில் அவரது சகோதரரிடம் விசாரணை நடத்தினார்.
Related Tags :
Next Story