ஆரல்வாய்மொழி அருகே வட மாநில பெண் அடித்துக்கொலை; மதுபோதையில் கணவர் வெறிச்செயல்


ஆரல்வாய்மொழி அருகே வட மாநில பெண் அடித்துக்கொலை; மதுபோதையில் கணவர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே வட மாநில பெண்ணை மது போதையில் அடித்துக்கொலை செய்ததாக கணவர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி அருகே வட மாநில பெண்ணை மது போதையில் அடித்துக்கொலை செய்ததாக கணவர் கைது ெ்சய்யப்பட்டார்.

செங்கல் சூளை

ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன்புதூர் சமத்துவப்புரத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவர் கட்டளைக்குளம் பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார்.

இவரது செங்கல் சூளையில் வட மாநிலத்தை சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். அதில் மேற்கு வங்காளம் பேல்பூர் அருகே உள்ள போல்டா நாடியா பகுதியை சேர்ந்த டெபுராய் (வயது 30) என்பவர் மனைவி வசந்தி பகாடியா (29), மகன் சிவா பகாடியாவுடன் (7) வசித்து வந்தார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வேலை இ்ல்லை என்பதால் டெபுராய், மனைவியுடன் மார்க்கெட்டுக்கு சென்று பொருட்களுடன் 3 குவாட்டர் மது பாட்டிலும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

பெண் அடித்துக்கொலை

கணவன்-மனைவி இருவரும் இரவு மது குடித்தனர். இரவு 11 மணி அளவில் வசந்தி பகாடியா அதிக மது குடித்ததாக கூறி டெபுராய் தகராறு செய்துள்ளார்.

அப்போது திடீரென்று அவர் அருகில் கிடந்த கம்பை எடுத்து வசந்தி பகாடியாவை அடித்துள்ளார். இதனால் அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் வசித்த குடும்பத்தினர் வந்தனர். உடனே டெபுராய் வீட்டின் கதவை பூட்டி விட்டார். பின்னர் எந்த சத்தமும் இல்லை. இந்த நிலையில் நேற்று காலை அருகில் வசிப்பவர்கள் சென்று பார்த்த போது அங்கு வசந்்தி பகாடியா காயங்களோடு பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி செங்கல்சூளை அதிபர் சசிகுமாருக்கும், ஆரல்வாய்மொழி போலீசாருக்கும் தகவல் ெ்தரிவித்தனர். உடனே நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார், ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரித்தனர். அப்போது வசந்தி பகாடியா கம்பால் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. வசந்தி பகாடியாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரி்ே்சாதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

அதைத்தொடர்ந்து டெபுராயை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்ே்பாது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அதன் விவரம் வருமாறு:-

செங்கல்சூளை வேலைக்கு டெபுராய் 4 மாதங்களுக்கு முன்புதான் வசந்தி பகாடியா மற்றும் சிவா பகாடியாவுடன் வந்துள்ளார். டெபுராய்க்கு 3-வது மனைவி வசந்தி பகாடியா ஆவார். வசந்தி பகாடியாவின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தை தான் சிவா.

டெபுராயின் முதல் மனைவி கொல்கத்தாவில் 2 குழந்தைகளுடன் உள்ளார். பின்னர் திருமணம் செய்த 2-வது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் 3-வதாக வசந்தி பகாடியாவை திருமணம் செய்து கொண்டார்.

கணவர் கைது

டெபுராய்க்கும், வசந்தி பகாடியாவுக்கும் மது குடிக்கும் பழக்கம் உண்டு. அதன்படி நேற்று முன்தினம் இரவு இருவரும் சேர்ந்து மது குடித்தனர். அப்போது வசந்தி பகாடியா அதிக மதுவை குடித்ததால் கம்பால் அடித்ததாக டெபுராய் கூறினார். அதனால் வசந்தி பகாடியா இறந்து விட்டார்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டெபுராயை கைது செய்தனர்.


Next Story