பயணியிடம் செல்போனை பறித்த வடமாநில வாலிபர் கைது


பயணியிடம் செல்போனை பறித்த வடமாநில வாலிபர் கைது
x

பெரியார் பஸ் நிலையத்தில் பயணியிடம் செல்போனை பறித்த வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை

சோழவந்தான் அருகே உள்ள தாராபட்டியை சேர்ந்தவர் ரவி (வயது 48), மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர்கள் இருவரும் நேற்று காலை மதுரை பெரியார் பஸ்நிலையத்திற்கு வந்தனர். அங்கிருந்து சேத்தமங்களம் செல்வதற்காக 2-வது பிளாட்பாரத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது ரவி அவரது செல்போனை பார்த்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவர்களை வடமாநில வாலிபர் ஒருவர் நோட்டமிட்டு கொண்டிருந்தார். திடீரென்று அந்த வாலிபர் ரவி வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு ஓடினார். அவரை திருடன், திருடன் என்று அவர்கள் விரட்டி சென்றனர்.

அப்போது அந்த வாலிபர் எல்லீஸ்நகர் பாலத்தின் கீழே தப்பி செல்லும் போது பொதுமக்கள் உதவியுடன் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை திடீர்நகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரித்த போது, ஒடிசா மாநிலம் பஞ்சாநகரை சேர்ந்த சாஜன்குமார்தாஸ் (33) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். பெரியார் பஸ் நிலையத்தில் நடந்த செல்போன் பறிப்பு சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story