புகையிலை பொருட்களுடன் வடமாநில வாலிபர் கைது


புகையிலை பொருட்களுடன் வடமாநில வாலிபர் கைது
x

புகையிலை பொருட்களுடன் வடமாநில வாலிபர் கைது

திருவாரூர்

நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்ெபக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நீடாமங்கலம் வடக்கு வீதியில் உள்ள ஒரு கடையில் வாலிபர் ஒருவர் பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில் சாக்குமூட்டைகளை ஏற்றி கொண்டிருந்தார். இதனை பார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷ்ரவன்குமார் (வயது22) என்பது தெரியவந்தது. சாக்குமூட்டைகளை சோதனை செய்தபோது, அதில் 8 சாக்குமூட்டைகளில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷ்ரவன்குமாரை கைது செய்து அவரிடம் இருந்த புகையிலை பொருட்களையும், ரூ.48 ஆயிரத்து 940 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story