வடமாநில வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தூசி அருகே வடமாநில வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூசி
மேற்கு வங்காள மாநிலம் வெங்கடா மாவட்டம் மில்ரா பகுதியை சேர்ந்தவர் ரெக்கவரி பட்டாரா. இவரது மகன் சித்ராஞ்சித் பட்டாரா (வயது 22).
இவர் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே நரசமங்கலம் கிராமத்தில் ஒரு வீட்டில் தங்கி காஞ்சீபுரம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அவர் வேலைக்கு வரவில்லை. இதனால் மேற்பார்வையாளர் வேலன், சித்ராஞ்சித் பட்டாரா தங்கி இருந்த வீட்டுக்கு வந்து பார்த்தபோது உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.
கதவை தட்டியும் திறக்காததால் அதனை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்து வேலன் தூசி போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து எதற்காக சித்ராஞ்சித் பட்டாரா தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.