வடக்கு மண்டல ஐ.ஜி. திடீர் ஆய்வு


வடக்கு மண்டல ஐ.ஜி. திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. திடீர் ஆய்வு

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பராமரிக்கப்படும் பதிவேடுகள், வழக்கில் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பார்வையிட்ட அவர் போலீஸ் நிலையத்தின் தூய்மை பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கடந்த 1.4.23 அன்று குளத்தூரில் அடையாளம் தெரியாத பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கை கேட்டறிந்த அவர், குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். பின்னர் நிருபர்களிடம் ஐ.ஜி.கண்ணன் கூறுகையில் குளத்தூரில் அடையாளம் தெரியாத பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொழில்நுட்பங்களை வைத்து குற்றவாளிகள் விரைவில் பிடிக்கப்படுவார்கள் என்றார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) திருமேனி, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story