வடகிழக்கு பருவமழை : வரும் 26-ந்தேதி அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை


வடகிழக்கு பருவமழை : வரும் 26-ந்தேதி அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
x

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து வரும் 26-ந்தேதி அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அடுத்த வாரம் 2-வது வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மழை நீர் வடிகால் தூர்வாரும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. ஆறு, குளம், கால்வாய்கள், தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தும் வேலைகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஏற்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அரசுத்துறை செயலாளர்கள், மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்பு உயர் அதிகாரிகள் மற்றும் போலீஸ் தீயணைப்பு அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.


Next Story