வடகிழக்கு பருவமழை 23-ந்தேதி தொடங்க வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்


வடகிழக்கு பருவமழை 23-ந்தேதி தொடங்க வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்
x

வடகிழக்கு பருவமழை வருகிற 23-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை,

தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி, அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் நிறைவு பெறும். அந்த வகையில் நடப்பாண்டில் தென் மேற்கு பருவமழை விலகுவதற்கான சூழல் நிலவி வருகிறதுஅதன்படி, இன்னும் ஓரிரு நாட்களில் தெலுங்கானா, மராட்டியத்தில் தென் மேற்கு பருவமழை விலகும் என்று எதிர்பார்ப்பதாகவும், அதனை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை விலகத் தொடங்கியதும், தமிழ்நாட்டுக்கு அதிகளவு மழை தரக்கூடிய வடகிழக்கு பருவமழை தொடங்கும். அந்த வகையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வருகிற 23-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் 25-ந்தேதிக்குள்(புதன்கிழமை) தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story